முகப்பு அன்மை செய்திகள் தேர்தலுக்கு முன்பாகவே தடுப்பூசி: டிரம்பின் அறிவிப்பை நம்ப மாட்டேன் – கமலா ஹாரிஸ்

தேர்தலுக்கு முன்பாகவே தடுப்பூசி: டிரம்பின் அறிவிப்பை நம்ப மாட்டேன் – கமலா ஹாரிஸ்

16
0

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக்கட்சியின் சார்பில் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்கு ஜோ பிடனும், துணை ஜனாதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸும் போட்டியிடுகின்றனர்.   அதிபர் தேர்தலை முன்னிட்டு அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்காவின் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாளில் தடுப்பூசி போட டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மக்களின் நம்பிக்கையை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என அதிபர் டிரம்ப் நம்புகிறார்.
இந்த நிலையில், கமலா ஹாரீஸ், டிரம்பின் அறிவிப்பை விமர்சித்துள்ளார். இது குறித்து  கமலா ஹாரீஸ் கூறுகையில், “ கொரோனா வைரஸ் தடுப்பூசி நவம்பர் மாதத்திற்கு முன்பாக கிடைத்தால், தடுப்பூசியின் திறன் மற்றும் பாதுகாப்பு விவகாரத்தில் டிரம்பின் வார்த்தையை நான் நம்ப மாட்டேன்” என்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்