தேவையான பொருட்கள்
கோதுமை ரவை – 1 கப்,
தண்ணீர் – 3 கப்,
தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,
கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
கடுகு – 1/4 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய் – 3,
கறிவேப்பிலை – 10,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை
கடலைப்பருப்பில் அரை டீஸ்பூன் தாளிக்க எடுத்து வைத்துவிட்டு மீதியை கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். பின் சிறு சிறு துண்டுகளாக உடைத்த மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். கோதுமை ரவை, ஊற வைத்த கடலைப்பருப்பு, தேங்காயை கடைசியாகச் சேர்த்து நன்கு கிளறி பாத்திரத்தை ஒரு மூடியால் மூடி வேக விடவும். நன்கு வெந்தவுடன் ஆற விடவும். ஆறியவுடன் உருண்டை பிடித்து ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.